11th October 2024 05:55:48 Hours
பயங்கரவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போரில் இருந்து தேசத்திற்கு நீடித்த அமைதியைக் கொண்டு வந்த ஈடு இணையற்ற சேவை வழங்குனர் மற்றும் பெருமைக்குரிய 'தேசத்தின் பாதுகாவலர்' ஆகிய இலங்கை இராணுவம் தனது 75 வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர் 10) பனாகொடை இராணுவ வளாகத்தில் பிரமாண்டமாகக் கொண்டாடியது.
இராணுவக் கொடி, படையணி கொடிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைக் கொண்ட பல வண்ணக் கொடிகள் அன்றைய சம்பிரதாயமான காட்சிக்கு வியத்தகு பின்னணியை வழங்கியன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, அன்றைய பிரதம அதிதியை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மரியாதையுடன் வரவேற்றதை தொடர்ந்து இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், அவர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணிவகுப்பு மைதானத்தின் நுழைவாயிலை வந்தடைந்தார். அங்கு இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் இராணுவ கொடி ஏற்றப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து, இராணுவப் பாடல் பாடப்பட்டதுடன், வீரமரணமடைந்த அனைத்து போர்வீரர்களின் நினைவாக கலந்துகொண்டவர்கள் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தின் மரபு இராணுவத்தின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ளதுடன் இலங்கையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு இராணுவ தின அணிவகுப்பில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஜிஏடி கொடவத்தை ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ உட்பட 25 படையணிகளை பிரதிநிதித்துவபடுத்தி 75 அதிகாரிகள் மற்றும் 626 சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
பிரதம அதிதி அணிவகுப்பை மீளாய்வு செய்த பின்னர், இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க இராணுவத் தளபதிக்கு படையினர் மரியாதை செலுத்தினர். அத்துடன் அன்றைய பிரதம அதிதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவு பதக்கத்தை 35 அதிகாரிகள் மற்றும் 25 தேர்தெடுக்கப்பட்ட சிப்பாய்களுக்கு அணிவித்து, நிறுவனத்தை பெருமைப்படுத்தியதுடன் அதன் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்கிய ஜனாதிபதியின் செய்தியை தொடர்ந்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த வருடத்தில் நிறுவனத்தை பெருமைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கு பங்களித்த 02 அதிகாரிகள் மற்றும் 07 சிப்பாய்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இராணுவத் தளபதியின் பாராட்டுச் சின்னம் சூட்டப்பட்டது. வீரம், நேர்மை, தேசிய அவசரநிலைகளில் அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் சொந்த பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் கடமை ஆகியவற்றில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் சிறந்த சாதனையாளர்களாக காணப்பட்டனர்.
தளபதி தனது சுருக்கமான உரையில், அனைத்து முன்னாள் தளபதிகள், காயமடைந்த மற்றும் உயிர்நீத்த போர்வீரர்கள், சேவையில் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாராட்டினார். ஜனநாயக செயல்முறை மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்திக் கொண்டு மக்களின் நலனைப் பாதுகாப்பதில் இராணுவம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பிரதிப் பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, முதன்மைப் பணி நிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகளின் துனைவியர்கள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.