Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இலங்கை இராணுவத்தின் நாற்காலி டெனிஸ் இறுதி சுற்றுப் போட்டிகள்

இலங்கை இராணுவத்தின் பரா டெனிஸ் போட்டிகள் (25)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு டெனிஸ் கழகத்தில் இடம்பெற்றது.

ஆறு படையணிகளை உள்ளடக்கி 19 விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் 20வது இலங்கை இராணுவ பரா டெனிஸ் போட்டிகள் இடம்பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சம்பியனாக கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் காமினியும்,இரண்டாவது இடத்தை பீரங்கிப் படையைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் தர்மகீர்த்தி மற்றும் லான்ஸ் பொம்படியர் தர்மசிரியும் பெற்றுக் கொண்டனர். மூன்றாம் இடத்தை கொமாண்டோ படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜயசுந்தர மற்றும் லான்ஸ் கோப்ரல் பிரதீப் குமாரவும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கேர்ணல் டப்ள்யூ.எஸ்.எம் அபேசேகரவும் இலங்கை டெனிஸ் சங்கத்தின் தலைவர் திரு. இக்பால் பில் இஸ்ஸெக்கும் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் பிரதீப் குணசேகர வெற்றியீட்ட விளையாட்டு வீரர்களுக்கு கிண்ணங்களை வழங்கி கௌரவித்தனர்.

Sneakers Store | Sneakers