Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2025 13:31:39 Hours

இலங்கை இராணுவக் குழு லெபனானில் உள்ள தூதரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையிலான தூதுக் குழு, மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ மற்றும் பிரிகேடியர் எஸ்.ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் உள்ளடங்கலாக 2025 பெப்ரவரி 09ஆம் திகதி லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது.

லெபனான் குடியரசிற்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. கபில சுசந்த ஜயவீர அவர்களினால் இந்தக் குழு அன்புடன் வரவேற்கப்பட்டது.

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் 15 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் பதக்கம் வழங்கும் விழாவிற்கு இணையாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.