Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2023 18:28:34 Hours

இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஐநா நிலை II மருத்துவமனைக்கான முன்-பயிற்சி நிறைவு

இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஐநா நிலை II மருத்துவமனைக்கான முன்-பயிற்சி நிறைவுகுக்குலேகங்க இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் நிலை II ஐநா மருத்துவமனை முன் பயிற்சியின் நிறைவானது பயிற்சி நிறுவனத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (மே 12) சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் இடம் பெற்றது. இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஐநா நிலை II மருத்துவமனைக்கான முன்-பயிற்சி நிறைவுஇந்த பாடநெறியில் இராணுவத்தின் 17 அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் ஓர் அதிகாரி மற்றும் 75 சிப்பாய்கள் பங்குபற்றினர். பாடநெறி ஏப்ரல் 24 அன்று தொடங்கி 12 மே 2023 நிறைவடைந்தது. இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஐநா நிலை II மருத்துவமனைக்கான முன்-பயிற்சி நிறைவுஇந்த பாடநெறி தென் சூடானில் உள்ள இரண்டாம் நிலை மருத்துவமனையில் பணியமர்த்தப்படுவதற்கு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை தயார்படுத்துவதாகும். இப் பாடத்திட்டமானது, ஒவ்வொரு அமைதி காக்கும் படையினருக்கும் தேவையான அறிவாற்றலுடன் அதன் பணிகள் மற்றும் கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு, வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஐநா நிலை II மருத்துவமனைக்கான முன்-பயிற்சி நிறைவுஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுவதற்கு முன்னர் பாடநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அத்துடன் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார்.