Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

30th March 2022 11:50:35 Hours

இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உண்மையான பாதுகாவலரான மாண்புமிகு நெஸ்பியின் கடந்த கால நினைவுகளை உள்ளடக்கிய புத்தகம் வெளியீடு

தற்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய பழமைவாதக் கட்சி அரசியல்வாதியும் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் இணை கூட்டுத் தலைவருமான மாண்புமிகு மைக்கல் நெஸ்பி அவர்கள், தனது புதிய புத்தகமான " Sri Lanka: Paradise Lost; Paradise Regained " இனை மாலை (29) ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ், ,இராஜதந்திரிகள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா உட்பட கௌரவமான அழைப்பாளர்கள் மற்றும் அறிஞர்கள், தேசபக்தர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

எல்டீடீ அமைப்பின் கொடூரம் மற்றும் எல்டீடீயின் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு எதிரான இலங்கையின் உறுதியான நிலைப்பாட்டை பாதுகாப்பதற்காக பிரித்தானியாவில் உள்ள பல்வேறு அரசியல் படிநிலைகளுக்கு அவரே எழுதிய கடிதங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளின் 54 பக்கங்களின் பின்னிணைப்புகளுடன் 19 அத்தியாயங்கள் கொண்ட 333 பக்க புத்தகம் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.

மாண்புமிகு நெஸ்பி 1974 இல் பிரத்தானிய பாராளுமன்றத்தில் தனது பணியைத் தொடங்கினார். அவர் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் உறுப்பினராக இருக்கும்போது 1992 முதல் 1997 வரை துணை சபாநாயகராக கடமையற்றியமை குறிப்பிடத்தக்கது.மாண்புமிகு நெஸ்பி அவரது அனைத்து அத்தியாயங்களிலும் கட்டுக்கதைகளைத் தணிக்கவும், இலங்கையின் அரசியல் மற்றும் பொது நிர்வாகம் மற்றும் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரிக்கவும் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறார்.அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம், சர்வதேச மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பல மேற்கத்திய ஊடக முகவர்கள் போன்ற முகவர் நிலையங்கள் இலங்கை இராணுவம் மற்றும் அதன் தலைமைத்துவம் பற்றி முற்றிலும் தவறான எண்ணத்தை சித்தரித்துள்ளன என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

மேற்குறிப்பிட்ட நிறுவனங்களும், பிரதமர் டோனி பிளேயர், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரதமர் கேமரூன், போன்ற பிரித்தானிய அரசியல் வாதிகளும் அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் கூட அந்த நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் குழுக்களின் தவறான தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.மாண்புமிகு நெஸ்பி தனது வாதங்களை முதன்மையாக தனது தனிப்பட்ட அவதானிப்புகள், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் காஷ் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தளமாகக் கொண்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளால் அனுப்பப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைத்தார்.

தமிழ்ப் புலிகள் இலங்கை அரசுக்கும் இடையில் நடைபெற்ற பல சமாதானப் பேச்சுக்கள் ஏன் தோல்வியடைந்தன என்பதற்கான காரணங்களை அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையில் நிலவிவரும் இனப்பிரச்சினைகளுக்கு தமிழ்ப் புலிகள் பிரதான கருவியாகப் பயன்படுத்திய வன்முறையின்றித் தீர்வு காண முடியும் என அவர் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தியா மற்றும் அமெரிக்காவின் சில தேவையற்ற தலையீடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா.வின் தடை உத்தரவுகளுடன் வழங்கப்பட்ட செயலற்ற ஒத்துழைப்பு ஆகியவை ஆயுத மோதலை சுமார் 30 ஆண்டுகளுக்கு கொண்டுசெல்ல வழிவகுத்தது. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டுக்குள் இத்தகைய நீண்டகால உள்நாட்டுப் போரின் மூலம் அந்நாட்டின் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு மற்றும் அன்றாட மனித செயற்பாடுகளை சீர்படுத்த முடியாத அழிவுக்கு வழிவகுத்தது.

விடுதலைப் புலிகளின் தயக்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் போரில் வெற்றி பெறுவதில் அதீத நம்பிக்கை காரணமாக நீண்டகால சமாதான உடன்படிக்கைக்கு வருவதில் இடைவிடாத தோல்விகள் இலங்கை இராணுவத்தின் ஆயுத போர் முடிவுக்குத் தள்ளியிருக்கலாம் என்று ஊகிக்க முடியாத கடினமான நிலை காணப்பட்டது. இலங்கையின் போர்ச் சூழலை சுதந்திரமாக விமர்சிப்பவன் என்ற முறையில், மேற்குலக வல்லரசுகள், இந்தியப் பெருங்கடலின் முத்து என்று மக்கள் மத்தியில் போற்றப்படும் நாட்டின் உறுதியற்ற தன்மையால் பலன் அடைந்தார்களா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.நெஸ்பி தனது பகுப்பாய்வில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் (ஜூன் 11, 1990) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற குறிப்பிட்ட சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். "இலங்கை அரசுக்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையே நடந்த முழு மோதலில் இது மிகப் பெரிய போர்க் குற்றங்களில் ஒன்றாகும்" (ப. 89) என்று அவர் கருதுகிறார். யாழ்ப்பாணத்தில் 72,000 முஸ்லிம்களை 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு தமிழ்ப் புலிகள் வற்புறுத்துவதும், தொழுகைக்கு வந்திருந்த 300 முஸ்லிம்களைக் படுகொலை செய்து குவிப்பதும் உண்மையான அர்த்தத்தில் ‘இனச் சுத்திகரிப்பு’ எனக் கருதப்படுகிறது.

நெஸ்பி அவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒருபோதும் சந்தித்ததில்லை ஆனால் அன்டன் பாலசிங்கத்தின் மூலோபாய சிந்தனை குறித்து சிலவற்றை கற்றுள்ளார். பாலசிங்கத்தின் அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே தவறாகவே இருந்தது. நோர்வேயின் முயற்சிகள் மோதலைத் தீர்ப்பதில் எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை. நெஸ்பியின் கூற்றுப்படி, அத்தகைய பேரழிவு நிகழ்வுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதை விட, நிகழ்வுக்குப் பிறகு கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு வழக்குத் தொடர ஐ.நா அதிக அக்கறை காட்டியது. பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாக்குகளால் அச்சமடைந்த பிரித்தானிய அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டுள்ளது.போரின் கடைசி நாட்களில் மக்கள் இறந்தது குறித்து நெஸ்பி குறிப்பிடுகையில்: “தமிழ் அதிகாரிகளின் அறிக்கைகளின்படி அதிகபட்சம் இலங்கை மக்கள்தொகை கணக்கெடுப்பில் 6,000 முதல் 7,000 பேர் என்று கூறினாலும் அதில் தமிழ் புலிகளின் இறப்பும் அடங்கும். தருஸ்மன் அறிக்கையில் ஐ.நா கூறியது போல், பல்லாயிரக்கணக்கான அல்லது குறைந்தபட்சம் 40,000 பேர் இறந்தது என்பது எப்பொழுதும் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.

2009 மே 19 ஆம் திகதிய போரின் முடிவில் 40,000 என்பது நம்பிக்கையற்ற மிகைப்படுத்தல் என்று ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கம் அறிந்திருந்தது, ஆனால் அவ்வாறு கூறவில்லை என்பதும் தெளிவாகிறது. நான் எதற்க்காக என ஆச்சரியப்பட்டேன்." (பக்.189-190)

(மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம்) 'இலங்கை மீதான அலுவலக விசாரணை' என்ற தலைப்பில் மார்ச் 2015 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் போரில் ஷெல் தாக்குதல்கள், உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றுடன் தொடர்புடைய பல தவறுகள் இருந்தன என்று லார்ட் நெஸ்பி மேலும் வலியுறுத்துகிறார். முதலியன (பக்கம் 189).

லோர்ட் நெஸ்பி குறிப்பிடுவது போல், "இது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சட்டபூர்வமான இலங்கை அரசாங்கத்திற்கும் ஒரு பயங்கரவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான போர் என்ற சுயநிரூபமான உண்மையை இந்த அறிக்கை புறக்கணிக்கிறது".போர்க்கள சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மாநாடு முற்றிலும் பொருத்தமற்றது என்று புத்தகத்தில் அவரது பகுப்பாய்வு கூறுகிறது.