Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ ஹொக்கி வீரர்கள் மற்றும் பளு தூக்கும் வீரர்களுக்கான போட்டி

பாதுகாப்பு சேவை ஹொக்கி போட்டி -2018 க்கான இறுதி போட்டியானது கொழும்பு ரீட் அவனியு ஹொக்கி விளையாட்டரங்கில் (14) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது. இப் போட்டியில் இராணுவ ஹொக்கி வீரர்கள் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.

இப் போட்டி நிகழ்விற்கு பிரதான அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன கலந்து கொண்டது வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு வெற்றச் சின்னமும் சான்றிதல்களும் வழங்கினார். மேலும் இந் நிகழ்விற்கு இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து, இராணுவத்தின் நிறைவேற்று ஜெனரலுமான இராணுவ ஹொக்கி விளையாட்டு கழகத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஹொக்கி விளையாட்டு ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் இலங்கை இராணுவ ஹொக்கி வீரர்கள் இலங்கை விமானப் படையினருடன் போட்டியிட்டு வெற்றியை தனதாக்கி கொண்டதுடன் இராணுவ ஹொக்கி வீரர்கள் இலங்கை கடற் படையினருடன் போட்டியிட்டதில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

மேலும் பாதுகாப்பு சேவை பளு தூக்கும் போட்டி -2018 க்கான இறுதி போட்டியானது களனி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கடந்த (12) ஆம் திகதி இடம் பெற்றது. இலங்கை இராணுவம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை எடுத்ததுடன், இலங்கை இராணுவப் வீரர்கள் இப் போட்டியில் முன்னணி வகித்தது.

இலங்கை கடற் படை மற்றும் இலங்கை விமானப் படையின் வீர வீரராங்கனைகள் இப் பாதுகாப்பு சேவை பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஹொக்கி போட்டிகளின் முடிவுகள் கீழே வருமாறு :

ஆண்கள்

போட்டியின் சிறந்த வீரர் – இராணுவ வீரர். குலதுங்க

போட்டியில் சிறந்த வீரர் –கோப்ரல் ஏ.ஏ வலகெதர

போட்டியின் சிறந்த கோல்ப் கீப்பர் - துப்பாக்கி வீரர் எச். எம். டி. கே. ஹேண்தெனிய

பெண்கள்

சிறந்த கோல்ப் கீப்பர் - மகளிர்

பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டி - 2018 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் வெற்றிகள் கீழே காட்டப்பட்டுள்ளன;

இராணுவ ஆண்கள் சாம்பியன்ஷிப்

தங்க பதக்கங்கள்

56 கிலோ எடை - லான்ஸ் கோப்ரல் குமார

105 கிலோ எடை – சார்ஜென்ட் அபேவிக்ரம

வெள்ளி பதக்கங்கள்

62 கிலோ எடை - சார்ஜென்ட் ஜேஏசி லக்மால்

69 கிலோ இராணுவ வீரர் - எல்.கே.சி.எம். கருனாரத்ன

77 கிலோ எடை - லான்ஸ் பொம்படி எச்.ஆர்.ஜே விஜேரத்ன

85 கிலோ எடை - இராணுவ வீரர எஸ்எஸ்எஸ் காமினி

105 கிலோ எடையுள்ள - இராணுவ வீரர் திரு.ஜயதிலகா

வெண்கலப் பதக்கம்

94 கிலோ எடை - லான்ஸ் கோப்ரல் கே ஜே ஏ அபயகோண்

இராணுவ மகளிர்

தங்க பதக்கங்கள்

48 கிலோ எடை - இராணுவ வீராங்கனை டி.டி.டி.அபேசேகர

90 கிலோ எடை - இராணுவ வீராங்கனை எஸ்.எம்.என்.பி அத்தநாயக்க

90 கிலோ எடைக்கு மேல் - லான்ஸ் Nகார்ப்ரல் ஐ ஏ. களுத்தந்திரி

வெள்ளிப் பதக்கங்கள்

58 கிலோ எடை - இராணுவ வீராங்கனை எஸ்.ஆர்.எஸ்.எம் குமாரி

63 கிலோ எடை வகை - இராணுவ வீராங்கனை எம்.டபில்யூ+.ஜீ.ஏ.கே செவ்வந்தி

வெண்கலப் பதக்கம்

90 கிலோ எடை - இராணுவ வீராங்கனை எச்.எஸ்.கே டி சில்வா Running Sneakers | Nike SB