Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2021 11:00:51 Hours

இராணுவ வைத்தியசாலைக்கு புதிய ஈசிஜி இயந்திரம்

இராணுவத்தின் சேவையை கருத்திற் கொண்டு இஎச் கழகத்தின் உறுப்பினர்களால் செவ்வாய்க்கிழமை (29) இராணுவ வைத்தியசாலையின் பயன்பாட்டுக்காக சுமார் ரூ .140,000.00 பெறுமதியான ஈசிஜி இயந்திரத்தை நன்கொடையாக வழங்கி வைத்தனர். இந்த இயந்திரம் வைத்தியசாலையில் கொவிட்-19 நோய்தொற்று சிகிச்சை பிரிவிற்கு பயன்படுத்தவுள்ளது.

இ.எச் கழகத்தின் தலைவி திருமதி தீபானி கமகே, இராணுவ வைத்தியசலையின் உணர்விழப்பு தொடர்பான மருத்துவ ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் வைத்தியர் ஷம்பிக அபேசிங்க, ஈ.எச் கழகத்தின் திரு. டி.கே.குலசிங்க மற்றும் திரு டி.எஸ்.கே விதானகே, லெப்டினன்ட் கேணல் நிலாந்த விஜேசிங்க மற்றும் லெப்டினன்ட் கேணல் கே.கே.எஸ்.பிரசன்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன.