Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2017 19:17:39 Hours

இராணுவ விவசாய ஆய்வின் மூலம் பொலித்தீனுக்குப் பதிலாக அவித்த வாழை இலைகள் அறிமுகம்

பொலித்தீன் பாவனைக்கு மாறாக வாழை இலைகளை அவித்து பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக பொதுமக்களிற்கு விழிப்புணவர்வை ஊட்டும் கண்காட்சி இராணுவத்தினரின் தலைமையில் இம் மாதம் 16-17 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார்.

அந்த வகையில் ஜனாதிபதியவர்களின் தலைமையில் மஹாவலி அதிகார சபையின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் நாட்டின் இயற்கையை பாதுகாக்கும் செயற்திட்டத்தில் இராணுவத்தின் விவசாய பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் புவனேக குணரத்தின அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இக் கண்காட்சியானது அவித்த வாழை இலைகளை பொலித்தீனுக்குப் பதிலாக பயன்படுத்துவதன் மூலம் பொலித்தீன் பாவனையை தவிர்த்தல் மற்றும் இவ் அவித்த வாழை இலைகளை மூன்று மாதங்களிற்கு மேலாக உபயோகிக்க முடியூம் என விளக்கிக் காண்பித்துள்ளனர்.

இதன் போது உணவைப் பொதி செய்யும் பின்னப்பட்ட ஓலைப் பெட்டியும் இந் நிகழ்வில் காட்சிப் படுத்தப்பட்டதோடு மேலும் இராணுவத்தினர் இலவசமாக இவ் வாழை இலைகளை பொது மக்களின் பாவனைக்காக வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

bridgemedia | Zapatillas de running Nike - Mujer