Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2023 22:21:12 Hours

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் இரண்டாம் ஆண்டு நிறைவு

அம்பலாங்கொட கரந்தெனிய இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் இரண்டாவது ஆண்டு நிறைவை ஜனவரி 02-04 ம் திகதிகளில் படையணிய தலைமையக வளாகத்தில் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

இந் நிகழ்வானது நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கரந்தெனிய இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் தளபதி, அதிகாரவனையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன் உணவகத்தின் முறையான ஒன்றுகூடலுடன் திங்கட்கிழமை (2) ஆரம்பமானது.

அன்றைய தினம் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் வருசவிதான முதியோர் இல்லத்திற்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர் போதி பூஜையைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் மத்திய தளபதி பிரிகேடியர் பந்துல பண்டார அவர்களும் கலந்து கொண்டார். இந்த ஏற்பாட்டில் நிலைய தளபதி , அதிகாரிகள் மற்றும் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் தளபதிக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கியதை தொடர்ந்து இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் மையத் தளபதி அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

அன்றைய பிரதம அதிதி படையினர் மத்தியில் உரையாற்றியதுடன், அதிகாரிகளின் உணவக வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன், குழு படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் அப்படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகரவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.