19th May 2024 13:44:26 Hours
இலங்கை இராணுவ பயிற்சி பணிப்பகத்தின் வழிகாட்டலின் கீழ் இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் இராணுவ விளையாட்டு வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி – (கட்டம் IV) புத்தளம் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையில் 17 மே 2024 அன்று நிறைவு பெற்றது.
கேணல் விளையாட்டு எச்.எச்.எஸ்.பீ.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இப் பயிற்சியினை 45 பேர் 18 ஏப்ரல் 2024 அன்று பயிற்சியைத் தொடங்கி 17 மே 2024 வரை தொடர்ந்தனர்.
விளையாட்டு பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.