Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2021 15:00:33 Hours

இராணுவ வழங்கல் பாடசாலையில் பயிற்சி பெறும் அதிகாரிகள் திருகோணமலைக்கு கல்வி சுற்றுலா

திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலையின் அதிகாரிகளுக்கான வழங்கல் தொடர்பான பாடநெறி எண் - 17 ஐப் பின்பற்றும் அதிகாரிகள் சமீபத்தில் திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்வியற் கல்லூரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர், மேலும் கடற்படை அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.

கடற்படை கல்வியற் கல்லூரியின் வகிப்பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக குறித்து அதிகாரிகளுக்கு கடற்படை அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் கடற்படை வழங்கல், களஞ்சிய முகாமை, வழங்கல் முகாமை மற்றும் தொடர்புடைய பிற விடயங்கள் குறித்தும் விளக்கினர். மேலும் அவர்கள் புதிய கடலோர பாதுகாவல்கடற்படைக் கப்பலான ‘சமுத்ரா’வின் செயல்பாட்டு அம்சத்தைப் பற்றியும் அறிந்து கொண்டனர்.

கடற்படை மற்றும் கடல்சார் கல்வியற் கல்லூரியின் தளபதியால் வரவேற்கப்பட்டதன் பின்னர் இராணுவம் மற்றும் கடற்படையின் விநியோக முகாமைப் பற்றி கலந்துரையாடப்பட்டது. இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே.ஜயசேகர, சிரேஸ்ட பயிற்சி ஆலோசகர்கள் மற்றும் சில அதிகாரிகள் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்திருந்தனர். Buy Sneakers | NIKE