Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ முயாத்தை இறுதி போட்டியில் இலங்கை இராணுவ சிங்க படையணியினர் வெற்றி

படையணிகளுக்கு இடையிலான முயாத்தை இறுதி போட்டி சம்பியன்ஷிப் 2019 க்கான போட்டியானது பனாகொடையில் அமைந்துள்ள இராணுவ உள்ளரங்க விளையாட்டரங்கில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. இப்போட்டியில், 11 படையணிகளுடன் 3 மகளிர் குழு அணிகள் போட்டியிட்டனர்.

இந்த ஆண்டிற்கான சம்பியன்ஷிப் (ஆண்) போட்டியில் இலங்கை இராணுவ விஜயபாகு படையணியினரை தோற்றுவித்து இலங்கை இராணுவ சிங்க படையணியினர் வெற்றிபெற்றனர். இந் நிகழ்விற்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத்

தளபதியுமான லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதான அதிதியை இராணுவ முயாத்தை கழத்தின் தலைவரும் கலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தநாயக அவர்களால் வரவேற்கப்பட்டார்.

தொடர்ந்து இராணுவப் பாடல் பாடப்பட்டதுடன், உயிர்நீத்த படை வீரர்களை நினைவு படுத்தி இராணுவ முயாத்தை கழத்தின் தலைவரும் அவர்களால் வரவேற்பு உரை நிகழ்தப்பட்டது.

இதேபோல், இலங்கை இராணுவ மகளிர் படையணி அணி சாம்பியன்ஷிப்பை தட்டி சென்றதுடன் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் மகளிர் அணியினர் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

இந்த போட்டியில் லான்ஸ் கோப்ரல் எஸ் பஹின்கமுவ அவர்களை தேல்வியடைய செய்து, சிறந்த வீரராக கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் டி திசனாநாயக்க அவர்கள் வெற்றி பெற்றார்.

அதன்படி, மகளிர்கான போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எஸ் ஹேரத் அவர்கள் வீராங்கனையாகவும், லான்ஸ் கோப்ரல் டி விசிதக்கம அவர்கள் தோல்வியை தழுவி கொண்டனர்.

தொடர்ந்து பிரதம அதிதி அவர்களால் அனைத்து வீரர்களுக்கும் வாழ்து தெரிவித்ததை தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு வெற்றி கிண்ணங்களை வழங்கினார், மற்றும்

இந்த நிகழ்விற்கு மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிஹே உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டனர். spy offers | Women's Sneakers