Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2024 18:35:06 Hours

இராணுவ முன்னோடி படையணி மற்றும் இலங்கை ரைபிள் படையணி சேவை வனிதையரின் மாதாந்த கூட்டம்

இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் இலங்கை ரைபிள் படையணி சேவை வனிதையர் பிரிவு ஆகியவற்றின் மாதாந்த கூட்டம் 07 ஜூலை 2024 அன்று 2 வது இலங்கை இராணுவ முன்னோடி படையணி அதிகாரிகள் உணவறையில் நடைபெற்றது.

இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி. எச் ஜி சுவர்ணலதா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார், இக்கூட்டத்தில் தற்போதைய திட்டங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் வீரர்களின் நல்வாழ்வை மேம்படுத்த எதிர்கால திட்டங்களைத் திட்டமிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டன.

இதன்போது படைவீரர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான செயலூக்கமான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை தலைவி வலியுறுத்தினார். அதன் பின்னர், விரைவில் நடைபெறவுள்ள பாடசாலை சீருடை வழங்கும் நிகழ்ச்சி குறித்தும் உறுப்பினர்கள் விவாதித்தனர்.

இக்கூட்டத்தில் இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் இலங்கை ரைபிள் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.