Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2021 09:58:07 Hours

இராணுவ மின்னொளி அலங்காரங்களை பார்வையிடுவதில் பொதுமக்கள் ஆர்வம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையக வளாகத்தில் காணப்படும் நீர்நிலைகள் மற்றும் வீதியோரம் படையினரால் மின்னொளியூட்டி அலங்கரிக்கப்பட்டன. மேற்படி அலங்கார தொகுதியானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வெள்ளிக்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.

மின்னும் பொருட்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்த மேற்படி அலங்கார தொகுதிக்குள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைச் சித்தரிக்கும் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தோடு, இராணுவ தலைமையகத்திற்குச் செல்லும் வீதிகள் மின்குமிழ்க்ளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த அலங்கார தொகுதிகள் 2022 ம் புத்தாண்டு பிறப்பு வரையில் காட்சிப்படுத்தப்படும்.

இராணுவத்தின் கலைத்திறன் மிக்க வீரர்களினால் ஆக்கப்பூர்வமாக கட்டமைக்கப்பட்ட அலங்கார தொகுதியை பார்வையிடுவதற்காக மாலை நேரங்களில் கூடும் மக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறனர்.