Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 10:04:33 Hours

இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரினால் காயமடைந்த போர் வீரர்களுக்கு பரிசுகள்

இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்கள் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து புதன்கிழமை (22) அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர'விற்கு விஜயம் செய்து, புனர்வாழ்வு மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் நலம் விசாரித்தார்.

விஜயத்தின் போது மிஹிந்து செத் மெதுரவில் இருந்த ஒவ்வொரு போர் வீரர்களுக்கும் வருகை தந்த பெண்கள் பரிசுப் பொதியை வழங்கி வைத்தனர். மேலும் போர்விரர்களின் மகிழ்ச்சிக்காக ஒரு கலிப்ஸோ இசை இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிரேஷ்ட சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.