08th November 2023 22:17:40 Hours
இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் காலாண்டு அதிகாரிகள் பயிற்சி தினம் புதன்கிழமை (01 நவம்பர் 2023) வேரஹெர இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் அதன் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.சி பெர்னாண்டோ யுஎஸ்பீ மற்றும் நிலைய தளபதி பிரிகேடியர் ஏயூஎஸ் வனசேகர ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ ஆகியோரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைப்பெற்றது. 140 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
அன்றைய நிகழ்ச்சிகள், காலை உடல் பயிற்சியுடன் ஆரம்பமாகியதுடன், கோது அல்லது வாள் அணி நடை பயிற்சியும் வழங்கப்பட்டது. மேஜர் டபிள்யூ.ஜி.ஜே.எம்.டி.எஸ். ஜயசிங்க அவர்களினால் "பொது அல்லாத நிதிகளின் கணக்காய்வு நடைமுறைகள்" பற்றி இளம் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
போர் கருவி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் டபிள்யூ.எம்.ஏ.என். வர்ணசூரிய ஏஏடிஓ அவர்கள் “இலங்கை இராணுவத்தின் கொள்வனவு நடைமுறைகள்” என்ற தலைப்பில் விரிவுரையை வழங்கினார். மாலையில் பொழுதுபோக்குக்காக அனைத்து அதிகாரிகளும் கிரிக்கெட் மற்றும் கரப்பந்து விளையாடினர்.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவகையில் திரு. நிலாந்தன் நிருதன் அவர்களினால் "உலகின் சமீபத்திய போர்கள் மற்றும் அந்த போர்களில் பயன்படுத்தப்பட்ட நுன்னறிவு தொழில்நுட்பம்"தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.