Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2024 19:44:24 Hours

இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் பலாலி இராணுவ தள வைத்தியசாலைக்கு விஜயம்

இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஜீகேஎச் விஜேவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 23 நவம்பர் 2024 அன்று பலாலி இராணுவத் தள வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, பணிப்பாளர் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் மனிதவள நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து பயனாளிகளுக்கும் சிறப்பான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்தார்.

சுகாதாரப் பணியாளர்களிடம் உரையாற்றிய பணிப்பாளர், நிறுவன இலக்குகளை அடைவதில் குழுப்பணி, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.