31st October 2017 14:03:49 Hours
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் இலங்கை இராணுவ மகளிப் படையணியின் 6ஆவது படைப் பிரிவினரின் (தொண்டர்) தலைமையில் பாரதிபுரத்திலுள்ள ராமகிருஷ்ன பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பாதணிகள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் சுமார் 6,000 ருபா பொறுமதியிலான 87 சோடிப் பாடசாலைப் பாதணிகள் மற்றும் சொக்ஸ் போன்றன வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இப் படையணியின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரின் நன்கொடையில் இப் பாடசாலைப் பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இப் பாடசாலை சிறார்களுக்கான இலவச வைத்திய நடமாடும் சேவையும் இப் பாடசாலை வளாகத்தில் இராணுவ வைத்திய அதிகாரிகள் மூவரின் பங்களிப்போடு இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான கேர்ணல் எஸ் தயானந்த அவர்கள் கலந்து கொண்டார்.
Running sports | Sneakers