Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2021 18:19:43 Hours

இராணுவ பொறியியலாளர்களால் பாடசாலை விளையாட்டு மைதானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கட்டுமானங்கள் முன்னெடுப்பு

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் உத்தரவிற்கு அமைவாக பாதுகாப்புத் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை பொறியியலாளர் படையணியின் தொழில்நுட்ப தகுதி வாய்ந்த படையினர்களால் நாடளாவிய ரீதியில் 24 பாடசாலை விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவிற்கு வந்துள்ளன. தலைமை கள பொறியியலாளர், மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொறியியலாளர் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பாடசாலைகளில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஹல்தும்முல்ல கிராம குமாரத்தன வித்தியாலயம், இரத்னபுரி தோரவெலிகந்த வித்தியாலயம், ஹேவஸ்ஸ ஆரம்ப பாடசாலை, யடிபன ஆரம்ப பாடசாலை, ரனேபுரகொட ஆரம்ப பாடசாலை, களுத்துறை மாவட்டத்தில் உள்ள குலனவத்த ஆரம்ப பாடசாலை, மொனராகலை மாவட்டத்தில் ரத்பலகம பாடசாலை, அலுத்வெல ஆரம்ப பாடசாலை மற்றும் பிட்டதெனிய ஆரம்ப பாடசாலை, கேகாலை மாவட்டத்தில் பொத்தெனிகந்த மகா வித்தியாலயம், கண்டி மீமூரே கைக்காவல ஆரம்ப பாடசாலை, மதவச்சி மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலை மாவட்ட கந்தளாய் அக்போபுர மகா வித்தியாலயம் குருணாகல் மாவட்டத்தின் பஹல கிரிபேவ மகா வித்தியாலயம், சாலிய அசோக நவோதய வித்தியாலயம், பொத்தனேகம விஜய வித்தியாலயம், வவுனியா மாவட்டத்தின் மரதங்கடவல வித்தியாலயம் தம்புதேகம ஆரம்ப பாடசாலை மற்றும் போகஸ்வெவ வித்தியாலயங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் அந்தந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட 13 திட்டங்களில் மேலும் 12 கட்டுமானத் திட்டங்கள் இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் பொறியியலாளர் பிரிவு ஜெனரலுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவின் அறிவுறுத்தலின் பேரில் மிக விரைவில் தொடங்கப்படும்.