02nd June 2023 23:54:45 Hours
கொழும்பில் இலங்கை விமானப்படை உள்ளக விளையாட்டரங்கில் மே 29 தொடக்கம் 31 வரையில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகளுக்கான பூப்பந்து போட்டியின் போது இராணுவ வீர / வீராங்கனைகள் தங்களின் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தினர்.
முப்படை வீரர்கள் போட்டியில் மேலாதிக்கத்திற்காக போட்டியிட்டனர் மற்றும் இராணுவ வீரர்கள் பின்வரும் அனைத்து சாம்பியன்ஷிப்களையும் பெற்றனர்:
திறந்த ஒற்றையர் ஆண்கள் - சாம்பியன் மற்றும் இரண்டாம் இடம்
திறந்த இரட்டையர் ஆண்கள் - சாம்பியன் மற்றும் இரண்டாம் இடம்
திறந்த ஒற்றையர் பெண்கள் - சாம்பியன் மற்றும் இரண்டாம் இடம்
திறந்த இரட்டையர் பெண்கள் - சாம்பியன் மற்றும் இரண்டாம் இடம்
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் - சாம்பியன் மற்றும் இரண்டாம் இடம்
40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் - சாம்பியன் மற்றும் இரண்டாம் இடம்
50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் - சாம்பியன் மற்றும் இரண்டாம் இடம்
இலங்கை விமானப் படையின் பணிப்பாளர் நாயகம்(செயல்பாட்டு) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்கிரமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி எப்ஏடபிள்யூசி கீவ்எப்ஐ, இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை பூப்பந்து சங்கத்தின் பிரதி தலைவர் திரு பாலித ஹெட்டியாராச்சி மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றினர்.