12th April 2025 19:47:31 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி நிலந்தி விஜேசூரிய அவர்கள் 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, பின்னர் தலைவி மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை மதிப்பாய்வு செய்ததுடன், எதிர்கால திட்டங்களுக்கு பிரிவின் தயார்நிலையை உறுதி செய்வதற்கும் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் பதவி விலகும் தலைவி திருமதி ஹன்சிகா மகாலேகம் அவர்களுக்கு வழங்கப்பட்ட முறையான பிரியாவிடையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.