Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2021 15:21:47 Hours

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி இலங்கை இராணுவ சேவைப் படை அதிகாரிகளுடன் சந்திப்பு

பனாகொடையிலுள்ள இலங்கை இராணுவ பொதுச் சேவை படைத் தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல வௌ்ளிக்கிழமை (06) நிர்வாக மதிப்பீட்டை மேற்கொண்டார்.

இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன அவர்களினால் பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுக்கும் வரவேற்பளித்தார். அதனையடுத்து படைப்பிரிவு தலைமையகத்தின் பணிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான அமர்வும் பிரதி பதவி நிலை பிரதானி தலைமையில் நடைபெற்றது. படைத்தளபதி சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் வழக்கமான பணிகளை முன்னெடுப்பதற்கான ஊக்குவிப்புச் செயற்பாடுகள் தொடர்பில் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

அதனையடுத்து பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் பணிப்பாளர்களால் அவதானிக்கப்பட்ட மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட குறைப்பாடுகளை சரிசெய்வதற்கு அவசியமான முன்னெடுப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதோடு, அதன் நிறைவில் படையணியின் விளைத்திறன் மேம்பாடு குறித்து படையணிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி பதவி நிலை பிரதானி ,மேஜர் ஜெனரல்கள், பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து படைத்தளபதி மற்றும் பிரதி பதவி நிலை பிரதானிக்கு இடையில் சம்பிரதாயங்களுக்கு அமைவான நினைவுச் சின்னங்களை பரிமாற்றிக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், பிரதி பதவி நிலை பிரதானி வெளியேறும் முன்பாக விருத்தினர் பதிவேட்டில் எண்ணப் பகிர்வுகளை பதிவிட்டார்.