22nd February 2023 19:48:54 Hours
மாதுருஓயா கந்தேகம கனிஷ்ட வித்தியாலய பாடசாலை அதிபரின் வேண்டு கோளுக்கிணங்க மாதுருஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் சேவையாற்றும் படையினர், பெப்ரவரி 17 - 18 ஆம் திகதிகளில் மதுருஓயா, கந்தேகம கனிஷ்ட விதாயாலயாவிலுள்ள கட்டிடத்தின் கூரையை புனரமைப்பதற்கு தமது உதவிகளை வழங்கினர்.பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இப் பணிக்கு தமது பங்களிப்பை வழங்கினர்.
இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரி முதலி அவர்கள் இப் புணரமைப்பு திட்டத்திற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.