28th August 2023 22:12:45 Hours
இலங்கை சிங்கப் படையணியின் பிரிகேடியர் எல்ஜிஜேஎன் ஆரியதிலக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் மதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக ஓகஸ்ட் 23 மத வழிபாடுகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல்மரியாதை வழங்கப்பட்டதுடன்,இராணுவ பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரியால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதன் பிறகு, மத ஆசீர்வாதங்களை தொடர்ந்து, அவர் தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அடையாளமாக தனது கையொப்பத்தை இட்டார். மேலும் அவரின் வருகையின் நினைவாக இராணுவ பயிற்சி பாடசாலை வளாகத்தில் மரக்கன்றினையும் நட்டு வைத்தார்.
இந்த நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் எல்ஜிஜேஎன் ஆரியதிலக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 512 வது காலாட் பிரிகேட் தளபதியாக கடமையாற்றினார். இதற்கு முன்னர் இந்த நியமனத்தில் இருந்த பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டார நாயக்க யூஎஸ்பீ அவர்கள் தற்போது 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.