Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2021 18:05:09 Hours

இராணுவ படையினர் சிரேஸ்ட பிரஜைகளுக்கான மாதாந்த ஓய்வூதியம் பெற்றுக் கொள்ள வசதிகள் வழங்கல்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடைக் காரணமாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்புப் படை தலைமையகங்கள் / படைப்பிரிவுகள் பிரிகேட்கள் ஊடாக நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைப்புகளின் இராணுவ படையினர் இன்று (10) ஓய்வூதியம் பெற்றுக் கொள்வதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்கினர். இது முழு பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தபின் முன்னெடுக்கப்படும் இரண்டாவது நடைமுறையாகும்.

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சிரேஸ்ட பிரஜைகளின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த திட்டம், அந்தந்த பகுதிகளில் இராணுவத்திற்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது. அந்தந்த கிராம சேகவர் அளித்த தகவல்களின் ஆதரவுடன் படையினர் பேருந்துகளை குறிப்பிட்ட சேகரிக்கும் இடங்களுக்கு எடுத்துச் சென்று தொடர்புடைய வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு அழைத்து சென்றன.

அந்த பகுதிகளில் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட தொடர்புடைய கிராம சேவையாளர்கள் மாவட்ட / பிரதேச செயலகங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புக்குப் பிறகு, இந்த திட்டம் ஜூன் 10 தொடங்கியதுடன் இது வெள்ளிக்கிழமை (11) வரை தொடரும்.

அதன்படி யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ மற்றும் மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே ஆகியோர் நாடு முழுவதுமான திட்டத்தை சம்பந்தப்பட்ட படைப்பிரிவு தளபதிகள் , பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தினர் .