Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ படையணிகளுக்கிடையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் போட்டிகள்

இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கிடையிலான 4 ஆவது மோட்டார் சைக்கிள் சம்பியன்ஷிப் போட்டியானது சனிக்கிழமை 29 ஆம் திகதி செவனகல மோட்டார் திடல் மைதானத்தில் இடம்பெற்றது.

நான்காவது ஆவது தடவையாக பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்ற இந்த போட்டியில் இராணுவத்திலுள்ள 11 படையணிகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

உடவலவயில் 29 ஆம் திகதி இடம் பெற்ற இப்போட்டியில நூற்றுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற இராணுவ ஓட்டுனர்கள் போட்டியிட்டனர். இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் ஏராளமான பார்வையாளர்கள் இந்த போட்டிகளை பார்வையிட கலந்து கொண்டனர்.

இப் போட்டியானது இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் 6 மோட்டார் சைக்கிள் போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டிகளில் இலங்கை இராணுவ பீரங்கி படையணி, இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணி, இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி, இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி, இலங்கை இராணுவ சிங்க படையணி, இலங்கை இராணுவ விஜயபாகு காலாட் படையணி, இலங்கை இராணுவ கஜபா படையணி, இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை படையணி, இலங்கை இராணுவ போர் கருவி படையணி, இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறிமுறை படையணி, இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த வீரர்கள் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேஜர் ஜெனரல் ஐ.ஓ. டப்ள்யூ மாதொட மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த போட்டிகளில் சிறந்த படையணியைச் சேர்ந்த ஓட்டுணர்களாக விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எச்.எம்.ஜே.எஸ் பிரேமரத்ன மற்றும் மின்சார பொறிமுறை படையணியைச் சேர்ந்த கே.ஏ.டி.ஆர் ஜயஷான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். Running sneakers | Air Jordan Release Dates 2020