Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2017 14:23:03 Hours

இராணுவ படைக்கல விநியோக பதவிநிலை 03 ஆவது பயிற்சி நெறி வெளியேற்றம்

திருகோணமலை இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் நடைபெற்ற இராணுவ படைக்கல விநியோக பதவிநிலை 03 ஆவது பயிற்சி கற்கை நெறி வெளியேறும் பயிற்சியில் நேபாளம் மற்றும் மாலைதீவ அதிகாரிகள் உட்பட இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் சான்றிதல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு கல்லுாரி கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதான விருந்தினராக வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ படைக்கள விநியோக கல்லுாரியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எச்.ஜே.ஐ வித்யானந்த மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க உட்பட உயர் அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.

இந்த கற்கை நெறியில் ஆலோசகர்கள் இராணுவ அதிகாரிகள், அரச நிறுவனம் மற்றும் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பேராசிரியர்களினால் கற்கை நெறியை தொடரும் பட்டதாரிகளுக்கு பொது பதவிநிலை கடமைகள் நடவடிக்கை செயற் பொறுப்புக்கள், நல்லினக்க நிபந்தனைகள், எழுத்து மற்றும் வசன பரீட்சைகள், நிர்வாக மூலதர்மம், ரெஜிமேன்ட் மட்டத்தில் படைக்கல விநியோகங்கள் சம்பந்தமாகவும் நிர்வாக பொதுக் கடமைகள் சம்பந்தமாக அறிவுறுத்தல்கள் இந்த பயிற்சி நெறிகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நெறியில் சிறந்த பெறுபேறுகளை இராணுவ பொறியியலாளர் சேவை படையணியின் மேஜர் எச்.எம்.எஸ்.எஸ் ஹேரத் பெற்றுக் கொண்டார். இந்த பயிற்சி பாடசாலை இராணுவ விநியோக கற்கை நெறிகளுக்காக 2011 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

Sports Shoes | Nike Air Max 270