25th March 2019 11:53:34 Hours
வெள்ளவத்தை கின்ரோஷ் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட நீச்சல் போட்டியில் இலங்கை இராணுவத்திலுள்ள ஆண், பெண் வீர ர், வீராங்கனைகள் சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப் போட்டியில் கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் நீச்சல் கழகங்களைச் சேர்ந்த 61 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளவத்தையிலிருந்து கல்கிஸ்ஸ வரையிலான 6 மைல் தூரத்திற்கான நீச்சல் போட்டிகள் இம் மாதம் (24) ஆம் திகதி இடம்பெற்றது.இதன் போது இராணுவ வீர, வீராங்கனைகள் திறமையாக நீச்சலை புரிந்து சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப் போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஆண் பிரிவில் 20 நீச்சல் வீரர்களும், பெண் பிரிவில் 8போட்டியாளர்களும் பங்கு பற்றிக் கொண்டனர்.
இலங்கை நீர்வள விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எச்.ஜி.ஐ வித்யானந்த தலைமையில் சில நாட்களுக்கு முன்னர் பலபிட்டி கடற்கரையில் நடைபெற்ற 2 மைல் திறந்த நீச்சல் போட்டியில் பங்கு பற்றி இராணுவ நீச்சல் அணியினர் சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நீச்சல் போட்டிகள் வெள்ளவத்தையிலிருந்து காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி 4 ½ மணித்தியாலங்கள் இடம்பெற்றது.
3 ஆவது சேவைப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டப்ள்யூ. விமல் குமார அவர்கள் இரண்டாவது இடத்தை பெற்று சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2 ஆவது இலங்கை மின்சார பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த போர் வீரன் டப்ள்யூ.எம்.பீ.எல் அபேரத்ன அவர்கள் மூன்றாவது இடத்தைச் பெற்றுக்கொண்டனர்.
4 ஆவது மகளீர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் பி.கே ஜயதிலக அவர்கள் 3 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டனர்.buy footwear | adidas Yeezy Boost 700 , Ietp