23rd April 2021 22:29:25 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழுள்ள கட்டளை அலகுகளின் சிப்பாய்கள் மத்தியில் சிக்கனம் என்ற எண்ணக்கருவை மேம்படுத்தும் நோக்கில் இராணுவ நலன்புரி நிதியம் தொடர்பில் கற்பிக்கப்பட்டது.
இந்த நிதியத்தின் நன்மைகள் தொடர்பில் அதிக தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக இராணுவ நலன்புரி நிதியத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாலிய பத்மசாந்த சொற்பொழிவை நிகழ்த்தினார்.
அதேநேரம் இராணுவத்தின் முன்னோக்கு மூலோபாய திட்டம் 2020 – 2025 திட்டத்தின் ஒரு கட்டமாக, இந்த விரிவுரை புதன்கிழமை (21) முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.