22nd February 2023 19:53:44 Hours
சிறுவர் இல்ல அதிகாரிகளால் இராணுவ தொண்டர் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து ஜனவரி 27 முதல் பெப்ரவரி 09 வரை கொஸ்கமவிலுள்ள சுவசெத சிறுவர் இல்லத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட முட்கம்பி வேலியை முழுமையாகப் புனரமைப்பதற்காக இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தின் படையினர் தமது தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் மனிதவளத்தினையும் வழங்கினர்.
இராணுவ தொண்டர் படையணி தலைமையக படையினர் முட்வேலி புணரமைப்பு திட்டத்தினை தொடர்ந்து வளாகத்தில் நடுவதற்கு பழங்கள் மற்றும் பெறுமதிமிக்க மரங்களின் மரக்கன்றுகளையும் நன்கொடையாக வழங்கினர்.இராணுவ தொண்டர் படையணி தலைமையக தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் இராணுவ தொண்டர் படையணி தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வாவின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.