19th December 2019 14:23:05 Hours
புத்தளையில் அமைந்துள்ள இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் ‘வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வது’ தொடர்பான 2 ஆவது கருத்தரங்கு இன்று (19) ஆம் திகதி காலை நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த இராணுவ மற்றும் சிவில் பாதுகாப்பு நிபுணர்கள், சிந்தனையாளர்கள், அறிஞர்கள் மற்றும் வள பணியாளர்கள் பிரதிநிதிகள் குழுவினர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
‘வன்முறை தீவிரவாதத்தை எதிர்ப்பது’ தொடர்ச்சியான போக்குகள் மற்றும் சவால்கள் தொடர்பான தலைப்பில் 14 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு பதிலாக இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
புத்தளை துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களால் உலகத்தின் வெவ்வேறு இயற்கையின் தீவிரவாத போக்குகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மட்டங்களில் கையாளப்படும் பாதுகாப்பு உத்திகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களின் முக்கியத்துவத்தை சம்பந்தப்படுத்தி வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மங்கள விளக்கேற்றும் நிகழ்வை தொடர்ந்து, பிரதம அதிதி மேஜர் ஜெனரல் தர்மரத்ன அவர்களால் தற்போதைய பாதுகாப்பு சிக்கல்களை சரியான கண்ணோட்டத்தில் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பாக உரை நிகழ்த்தப்பட்டது.
இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் மத்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களின் அழைப்பின்பிரகாரம், பல அறிஞர்கள்,சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரியின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் ஜயவர்தன,மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, திருமதி மனிஷா எஸ். வனசிங்க பாங்கல் மற்றும் டொக்டர் சமில தலங்கல ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
பண்டாரநாயக்க சர்வதேச கற்கைநெறி நிலைய பணிப்பாளர் கலாநிதி ஹரிந்த விதானகே,கேணல் டிகேஎஸ்கே தொலகே,கேணல் ஏஎம்சிபி விஜயராத, திரு அஷான் விக்ரமசிங்க, திரு ஆசிப் பௌட்,டொக்டர் சஞ்ஜீவ வீரவரண, லெப்டினன் கேணல் பிஎஸ்எஸ் சஞ்ஜீவ, திரு இந்திக பெரேரா (சுயாதீன சட்டத்தரணி), திரு நிலந்தன் நிருந்தன்(பிசிஐஎஸ்) மற்றும் மேஜர் டிபி அலுத்கே ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவர்.
பொது நிருவாக பணிப்பாளர் நாயகம்,காலாட் படையணியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ தலைமையகத்தின் பணிப்பாளர்கள், பயிற்சி கல்லூரிகளின் கட்டளைத் தளபதிகள், இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் முன்னய கட்டளைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD