02nd October 2024 19:44:31 Hours
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு விழா மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) இந்து பாரம்பரியத்தின் விஷேட ஆசீர்வாத பூஜை 02 ஒக்டோபர் 2024 அன்று கொழும்பு 6, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ இந்து சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜையில் இராணுவக் கொடி கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
இராணுவ இந்து சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை மரியாதையுடன் வரவேற்றார். ஆலய மணிகள் ஒலிக்கத் தொடங்கியதும் தளபதி இராணுவக் கொடியை ஆலய பிரதம குருக்களிடம் ஆசீர்வாதத்திற்காக கையளித்தார். அதனைத் தொடர்ந்து, ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ ராகவன் குருக்கள் தலைமையில் பூஜை நடைபெற்றது.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மத அனுஷ்டானத்திற்கு பின்னர், கோவிலின் திருப்பணிக்காக ஆலய அறங்காவல் சபைத் தலைவர் திரு.சுந்தரலிங்கம் அவர்களிடம் அனைத்து இராணுவத்தினர் சார்பாக நிதி நன்கொடை வழங்கினார்.
இராணுவ பதவி நிலை பிரதானி, இராணுவத் தொண்டர் படையணி தளபதி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இந்து சமயத்தைச் சார்ந்த பல சிப்பாய்கள் ஆசீர்வாத பூஜையில் கலந்து கொண்டனர்.