Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2021 20:13:59 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பதவி உயர்வு போனஸ்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ அவர்களினால் இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை (10 அக்டோபர்) முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகள் மற்றும் 10369 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய 8 சிரேஸ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும்,17 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 42 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 60 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும், 256 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 10 லெப்டினன் அதிகாரிகள் கெப்டன் நிலைக்கும், 2 ஆம் லெப்டினன்கள் 152 பேர் லெப்டினன் நிலைக்கும் 22 பயிளிலவல் அதிகாரிகள் லெப்டினன் (பொதுப்பணி) நிலைக்கும் 10 ஒக்டோபர் 2021 அன்று பதவி உயர்வு பெறவுள்ளனர்.

18 ஆகஸ்ட் 2019 ல் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரான குறுகிய காலத்திற்குள் இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு அதிகளவு நிலை உயர்வுகளை வழங்கிய தளபதியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

72 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 3873 அதிகாரிகளுக்கும், 78,707 சிப்பாய்களும் 18 ஆகஸ்ட் 2019 தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் நிலை உயர்வுகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.