Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2021 14:15:18 Hours

இராணுவ தினத்தன்று 621 & 622 வது பிரிகேட் படையினரால் மரம் நடுகை

இராணுவத்தின் 72 வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் , 621 வது மற்றும் 622 வது பிரிகேட் படையினர் மாபெரும் மரம் நடுதல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை (10 அக்டோபர்) 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் வழிகாட்டுதல்களின் கீழ் முன்னெடுத்தனர்.

அதன்பிரகாரம், 621 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பெரகும் அவர்களின் மேற்பார்வையின் கீழ், அவ்பிரிகேட் படையினர் இணைந்து 200 பலா மரக்கன்றுகள் மற்றும் 100 தென்னங்கன்றுகள் ஆகியவற்றை முகாம் வளாகத்திற்குள் நட்டனர். அதேசமயம் 14 வது (தொண்) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினர் இணைந்து 50 தென்னை மரக்கன்றுகளை அப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கஜபா விகாரை வளகைத்தில் நட்டனர்.மேலும், கஜபாபுர கிராமவாசிகளுக்கு 200 தென்னங்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.

கஜபாபுர ஸ்ரீ கஜபா விகாரையின் தலைமை விகாராதிபதி வண. குருநாகல நந்தசார தேரர், பெரகும், 621 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி, 14 வது (தொண்) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜினேஷ் லியனகம, அதிகாரிகள் , சிப்பாய்கள் மற்றும் கிராமவாசிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.இதற்கிடையில், 622 வது பிரிகேட் மற்றும் 9 வது கஜபா படையணியின் படையினர் மா, பலா, கொய்யா, எழுமிச்சை மற்றும் மருதை உள்ளிட்ட 150 மரக்கன்றுகளை ஹலபவேவா விகாரை தலைமை விகாராதிபதி , கிராம உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவ்விகாரையில் வைத்து விநியோகித்தனர். 20 வது கஜபா படையணி படையினர் , தலைமை விகாராதிபதி ஆகியோர் பழைய மெதவாச்சியா பிரதேச பிரிவில் 100 மரக்கன்றுகளை (வேம்பு , மீ மற்றும் மருதை ) பொதுமக்களுக்கு விநியோகித்தனர். மேலும், அந்த மரக்கன்றுகள் முதிர்ச்சியடையும் வரை படையினரால் பராமரிக்கப்படும்.