14th October 2021 17:25:45 Hours
இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு விழா நிகழ்வுகளை முன்னிட்டு 23 வது படைப்பிரிவின் 233 வது பிரிகேட்டின் கீழுள்ள 9 வது இலங்கை பீரங்கி களப் படையணி மற்றும் 6 வது கஜபா படையணியினரால் வைத்திய அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் பொலன்னறுவை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு இரத்ததானம் வழங்கும் பணிகள் திங்கட்கிழமை (11) மன்னம்பிட்டிய பிரதீபா மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 233 வது பிரிகேடின் 200 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது. இதன்போது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வைத்திய ஊழியர்களுடன் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
23 வது படைப்பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே, அதிரிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.