Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th October 2021 15:06:32 Hours

இராணுவ தினத்தன்று கஜபா படையணியின் கோட்டையில் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் கடந்த கால அனுவபங்கள் மீட்டிப்பார்ப்பு

72 வது இராணுவ தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், சாலியபுர கஜபா படையணியின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டமையானது சிறப்பம்சமாகும். ஜனாதிபதியவர்கள் கஜபா படையணியின் முன்னாள் வீரர் என்பதாலும் படையணியுடன் இருக்கின்ற பற்று காரணமாகவும் அவர் இவ்விழாவில் கலந்துகொண்டமையும், நாட்டின் தலைவரொருவர் முதன்முறையாக இவ்வாறான நிகழ்வில் கலந்துகொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவரது வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுவதோடு, நாட்டின் சேனாதிபதி இராணுவ தினத்தில் முதல் முறையாக இராணுவ தினத்திற்கு வருகை தந்தயையிட்டு அவருக்கு கௌரவிப்புக்கள் வழங்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவான அவர் கஜபா படையணியின் நிறைவேற்று நிர்வாக அதிகாரியாக அவர் பணியாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது தற்போதைய முதலாவது தளபதியான தற்போதைய தளபதி அவர்களினால் கௌரவிக்கப்பட்டார். ஜனாதிபதி பதவி என்ற உயர்வான இலக்கை அடைந்துகொண்ட கஜபா படையணியின் வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்.

லெப்டினன் கேணல் விஜய விமலரத்ன அவர்களால் ரஜரட்ட ரைப்பல் படையணி 1983 ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி நிறுவப்பட்ட கஜபா படையணியின் முதலாவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய இளம் அதிகாரியாக 1972 மே 26 அன்று அதிகாரியாக இலங்கை சமிக்ஞை படையணியில் அதிகாரவரணையினை பெற்றுக் கொண்டதுடன் பின்னர் இலங்கை சிங்கப்படையில் காலாட் படை வீரராக இணைந்துகொண்டிருந்தாலும் கஜபா படையணியின் அதிகாரியாக அவர் இணைந்துகொண்டதன் பின்னரே அவர் இராணுவ வாழ்வை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது முதல் இராணுவப் பணியின் போது, ஆர்வமுள்ள மற்றும் வளரும் கஜபா படைணயின் அதிகாரியாக தனது கஜபா படையணியின் உறுப்பினர்களுடன் இணைந்து 1985 இல் மகாவிளச்சிய பொலிஸ் நிலையத்தை தாக்கிவிட்டு தப்பியோட முற்பட்ட பயங்கராவாதிகளை அழிக்கும் பணிகளும் அவர் முன்நின்றார். அதேபோல் மூதூர் இராணுவத் தளம் பயங்கரவாதிகளின் முற்றுகையிடப்பட்ட போதும் அவர்தான் அங்கிருந்த படைகளுக்கு கட்டளையிடும் தளபதியாகவும் அவரே செயற்பட்டார். அவர் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு முன்னர் 35 வருட அடர்ந்த வனப்பகுதிக்கு ஊடுருவிச் சென்று இலக்குகளை அடைய வேண்டிய கட்டாய நிலையை எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியை விடுவிப்பதற்கான 1987 ஆண்டு தாக்குதலின் போது “ஒப்பரேஷன் லிபரேஷன்” நடவடிக்கைக்கும் தலைமை தாங்கினார். முதலாவது கஜபா படையணியின் அதிகாரியாக இணைந்ததிலிருந்து பயங்கராவதத்தை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். மீண்டும் 1990 இல், யாழ்ப்பாணக் கோட்டைக்குள் எந்தவிதமான விநியோக வழியும் இல்லாமல் முற்றுகையிடப்பட்ட படையினரை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த புகழ்மிக்க இராணுவ வீரரான மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவாவின் கட்டளையின் கீழ் பணியாற்றிய அதிஷ்டசாலிகளில் அவரும் ஒருவராவார். இந்த நடவடிக்கைகளின் போது அவர் செய்த அர்ப்பணிப்பு அவருக்கு 'ரண விக்கிரம பதக்ம்' மற்றும் 'ரண சூர பதக்கம்' போன்ற இராணுவ பதக்கங்களை பெற்றுக்கொள்ள வழிவகுத்து. அத்தோடு எதிரிகளுக்கு முன்பாக அவரது துணிச்சலான செயல்கள் அவரது மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டன.

அவரது தொழில் தகைமைகளை கருத்தில் கொண்டு கேணல் கோட்டாபய ராஜபக்‌ஷ கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி தளபதியின் அலுவலகத்தின் பணிகளுக்காக அமர்த்தப்பட்டார். 1992 ஆம் ஆண்டிலிருந்து இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரையில் அவர் இந்த பதவியை வகித்தார்.

இவ்வாறான சிறந்த கதாபாத்திரத்திற்கு 2005 ஆம் ஆண்டில் பொன்னான வாய்ப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி கிட்டியது. ஒரு காலத்தில் நாட்டிற்குள் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கொடூரமான குண்டு வெடிப்புகள் என்பவற்றால் மக்கள் பெரும் அவதியுற்றனர். எந்த சந்தர்ப்பமும் நிச்சயமற்றதாக இருந்ததோடு பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதே சமயத்தில் பயங்கரவாத குழுக்களுடனான சமதான பேச்சுக்களும் சரிவை காணும் நிலை ஏற்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டில் புலி பயங்கரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை பாதுகாப்பு செயலாளரின் வாகனத்தில் மோதியிருந்த போதும் குறித்த தற்கொலை தாக்குதல் முயற்சியிலிருந்து மயிரிழையில் சிறிய காயங்களுடன் அவர் தப்பினார். 2009 மே மாதத்தில் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நிலையான அமைதியை நிலைநாட்டும் காலம் உதயமாகும் வகையில் விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவதற்கு மிகவும் தேவையான மூலோபாய திட்டமிடல், ஒருங்கிணைத்தல், ஊக்குவித்தல் மற்றும் முகாமைத்துவம் ஆகிய பணிகள் கோட்டாபய அவர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றிக்கான அவரது மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கொழும்பு பல்கலைக்கழகம் உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தின் உச்சக்கட்டத்திற்குப் பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியது. வன்முறை யுத்தம் முடிவடைந்தவுடன், கண்ணிவெடி அகற்றல், புனரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு ஆகியவற்றில் இராணுவத்தின் ஈடுபாட்டை தொலைநோக்குத் தலைவர் மேற்பார்வையிட்டார், இது அனைவரையும் கவர்ந்தது. அவர் தேசிய பாதுகாப்பு, தேசிய வளர்ச்சி மற்றும் உளவுத்துறையின் பங்கேற்பு ஆகியவற்றை திறம்பட ஒருங்கிணைக்கும் அதே சமயம் அமைதி கால ஆதரவாளர்களாக பணியாற்ற சட்ட அமலாக்க நிறுவனங்களின் படிப்படியான மற்றும் முறையான மாற்றத்தையும் உறுதி செய்தார்.

ஊனமுற்ற போர் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதை நோக்கமாக கொண்டு அவர்களுக்கான உத்வேகம், சிகிச்சை, பராமரிப்பு மற்றும் வைத்திய சிகிச்சைகளை தொடர்வதற்கு வசதியான சூழலை ஏற்படுத்திகொள்ள வேண்டிய முக்கியத்துவத்தையும் அறிந்துகொண்டு அவர் செயற்பட்டார். அதற்காக அவர்களின் மீதமுள்ள வாழ்க்கை காலத்தை மிகவும் மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 'மிஹிந்து செத் மெதுர மற்றும் 'அபிமன்சல' போன்ற புனர்வாழ்வு மையங்களை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு நல்ல நாளை உருவாக்க தன்னலமின்றி தங்கள் உடல் உறுப்புகள், கால்கள் மற்றும் கைகால்களை தியாகம் செய்தவர்களின் தியாகத்திற்காக மேற்படி நிலையங்கள் தற்போதும் இயங்கி வருகின்றன.

அவரது தொலைநோக்கு மற்றும் அசாதாரணமான வெற்றிகரமான நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக போதனா வைத்தியசாலை, கொழும்பு இராணுவ வைத்தியசாலை மற்றும் மிக முக்கியமாக பத்தரமுல்லா ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவிலுள்ள பாதுகாப்பு சேவைகள் தலைமையக கட்டிடத்தொகுதி ஆகியன அவரது தூரநோக்கம் கொண்ட திறன்களுக்கு சான்றாக உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஞாயிற்றுக்கிழமை (10) இராணுவ தினத்தை முன்னிட்டு கெட்டேரியனான (கஜபா படையின் உறுப்பினர்) நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானதிலிருந்து ஆயுத படைகளுக்கு “சாத்தியமற்றதென ஒன்றுமில்லை” என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்துள்ளார்.