Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2022 15:05:39 Hours

இராணுவ தாதியர் பயிற்சி பாடசாலையில் 50 புதிய தாதியர் குழுவினர் பயிற்சி நெறியை நிறைவுசெய்தனர்

முப்படையினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் அனுராதபுரம் இராணுவ தாதியர் பாடசாலையில் மூன்று வருட பொது தாதியர் நிபுணத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 50 தாதியர்களின் வெளியேற்ற நிகழ்வு அண்மையில் அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் தாதியர் கல்வி பணிப்பாளர், இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.என் பத்திரன மற்றும் பல சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.சுகாதார அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிவில் மாணவர் தாதிகள் பொதுவாக அரசாங்க தாதியர் பாடசாலைகள், சுகாதார அமைச்சு, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மருத்துவ ஊழியர்கள், மற்றும் தாதி மற்றும் சுகாதார துறையில் தகைமை பெற்ற இராணுவக் கல்விப் பணியாளர்களுடன் இணைந்து அனுராதபுரம் இராணுவ தாதியர் பாடசாலையில் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு 2018ம் ஆண்டு தொடக்கம் மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு, 50 பெண் தாதியர் மற்றும் ஆண் தாதியர் கொண்ட குழு, தங்கள் டிப்ளோமாக்களை முடித்து, இவ் விழாவில் அடையாள தொப்பியைப் பெற்றனர். அவர்கள் நாடு முழுவதும் உள்ள இராணுவ மருத்துவமனைகளுக்கு நியமனம்பெற்று செல்லவுள்ளனர்.அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.என் பத்திரன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகலும் கலந்துகொண்டனர். இராணுவ மருத்துவ பாடசாலை 2001 இல் நிறுவப்பட்டதுடன் 2001 க்கு முன்னர் சுகாதார அமைச்சில் உள்ள அரசாங்க தாதியர் பயிற்சி பாடசாலைகளில், இராணுவம் , கடற்படை மற்றும் விமானப்படை இராணுவ தாதயினருக்கான பயிற்சியளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரிகேடியர் பத்திரன தனது சுருக்கமான உரையில் இராணுவ தாதயர் பாடசாலையின் அதிபர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பங்கு மற்றும் ஆயுதப்படைகளுக்கு நன்கு தகுதியான மற்றும் ஒழுக்கமான தாதியர் ஊழியர்களை வளர்ப்பதற்கான மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டினார். பாடசாலை அதிபர் மேஜர் (கியூஎம்) கே.ஏ.சரத்சந்திர இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவப் பயிற்சி கட்டளை தலைமையக தளபதி, இராணுவப் பயிற்சி பணியகம், இலங்கை இராணுவ வைத்திய சேவை படையணி தளபதி, இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய பங்களிப்பாளர்கள் சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற பயிற்சி வகுப்பின் வெற்றிக்காக வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகம், இராணுவப் பயிற்சி பணியகம், இராணுவப் பயிற்சி பணிப்பகம், இராணுவ பயிற்சி கட்டளை தலைமையகம், இராணுவ மருத்துவ சேவைகள் பணியகம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் றே்பார்வையின் கீழ் இந்த மூன்று வருட கால டிப்ளோமா பயிற்சி வகுப்பு நடாத்தப்பட்டது.மூன்று வருட கால டிப்ளோமா பாடநெறியின் போது கோட்பாட்டு பாடநெறி மற்றும் மருத்துவ பயிற்சி நிரல்கள் தகுதி வாய்ந்த இராணுவ கல்வி ஊழியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்படுகின்றன.

சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட முதலாம் ஆண்டு பரீட்சையை வெற்றிகரமாக நிறைவு செய்த அந்த மாணவ தாதியர்களுக்கு தொழில்முறை தொப்பி அணிவிக்கப்பட்டதுடன், பின்னர் அதே சந்தர்ப்பத்தில் சிறப்புமிக்க பார்வையாளர்கள் முன்னிலையில் மூன்று சுடர்கள் கொண்ட எண்ணெய் விளக்கை ஏந்தி சத்தியப்பிரமாணம் செய்ய தகுதி பெற்றுள்ளனர். அனுராதபுரம் பிராந்திய மருத்துவ சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.சி.டி ஆரியரத்ன, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி.எம்.எஸ்.சமரவீர, அனுராதபுரம் அரச தாதியர் கல்லூரியின் அதிபர் திரு.கே.ஏ.சுனில் சாந்த, அழைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லயனல் பி பலகல்ல, இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி பெரேரா, இராணுவ மருத்துவ சேவைகளின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, இராணுவ தாதியர் பாடசாலையின் முதல் அதிபர் செல்வி எம். போல், இராணுவ தாதியர் பாடசாலையின் முதல் நிர்வாக அதிகாரி கெப்டன் டபிள்யூ.டபிள்யூ. பி ஜெயசுந்தர ஆகியோர் 2001 ஆம் ஆண்டு இராணுவத்தின் இராணுவ தாதியர் பாடசாலை நிறுவுவதில் முன்னோடியாக செயல்பட்டனர்.