Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ தளபதி லீக் T 20 கிரிக்கெட் போட்டி 5ம் திகதி ஆரம்பம்

இராணுவ தளபதி லீக் T 20' கிரிக்கெட் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் கொழும்பு இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியளாலர் படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியும் இலங்கை இராணுவ கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இராணுவ கிரிக்கெட்டின் சங்க உபத் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான பிரிகேடியர் ஷிரான் அபேசேகர மற்றும் இராணுவ பேச்சாளரும், பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும் இராணுவ ஊடக பணிப்பகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, தெற்கு, வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய பிராந்திய அணி தலைவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இராணுவத் தளபதி லீக் T20 கிரிக்கெட் போட்டி இராணுவத்தின் திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் எதிர் வரும் முக்கிய கழகப் போட்டிகளுக்கு அவர்களை மேலும் மேம்படுத்தல் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. போட்டியானது ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடைப்பெறும்.

இராணுவ தேசிய வீரர்களால் வழிநடத்தப்படும் நான்கு அணிகளில் விளையாடுவதற்கு தற்போதைய தேசிய அணியின் 12 வீரர்களுக்கு இராணுவத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான்கு அணிகளில் தலா மூன்று பேரும் தலா 2 தேசிய இராணுவ மகளிர் வீராங்கனைகள் ஒவ்வொரு அணிக்கும் உதிரி வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இப் போட்டிகள் தொம்பகொட இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் இராணுவ கிரிக்கெட் மைதானத்திலும் இறுதிப் போட்டிகள் புதுப்பிக்கப்பட்ட அனுராதபுர சாலியபுர கஜபா படையணியின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் பாதுகாப்பு பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மேஜர் ஜெனரல் வனிகசூரிய கூறினார்.

இப் போட்டியானது அதிக திறன் கொண்ட வீரர்களை ஈர்க்கும் என்றும், கிரிக்கெட்டில் அவர்களின் அனுபவம் நிச்சயமாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இராணுவ கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு உயர்த்த தேவையான உட்கட்டமைப்பை வழங்கிய இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவித்ததோடு, சாலியபுர புதிய விளையாட்டு மைதானத்தை அமைத்ததுக்கும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வீரர்கள் விளையாடுவதற்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவ கிரிக்கெட் போட்டியானது 1951 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதன்பிறகு இராணுவம் சிலோன் கிரிக்கெட் மன்றத்தில் பங்கேற்று 1963 ஆம் ஆண்டில் டெய்லி நியூஸின் முதல் சாம்பியன்ஷிப்பை வென்றது. பிரிக்கேடியர் (டாக்டர்) எச்.ஐ.கே.பெனாண்டோ மற்றும் யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் இராணுவம் புகழ்பெற்ற வீரராக கெப்டன் அஜந்த மெண்டிஸ் ஆனைச்சீட்டு அதிகாரி 1 சிக்குகே பிரசன்ன, ஆனைச்சீட்டு அதிகாரி 11 அசேல குணரத்ன போன்ற வீரர்களை உருவாக்கியுள்ளது. இலங்கையின் முன்னாள் தேசிய வீரர்களான தினேஷ் சந்திமல், திசர பெரேரா. பி.எச்.டி குசல் மற்றும் பல தேசிய அணி வீரர்கள் இராணுவ அணியை உயர்வாக்கியுள்ளது.

இலங்கை இராணுவம் 2004 ஆம் ஆண்டில் சாரா கிண்ண சாம்பியன்னாது. அதன் பின்னர் 2009 இல் பிரீமியர் டியர் பி மற்றும் ஏ அணியாக விளையாடியது. 2011/2012 முதல் இலங்கையின் முதன்மை எட்டு அணிகளுக்குள் இடம்பிடித்தது. அவர்கள் முறையே 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கழகங்களுக்கிடையிலான டி 20 சாம்பியன் மற்றும் 23 கீழ்பட்டவர்களுக்கான போட்டியில் ஷாம்பியன், மகளிர் பிரிவில் ஷாம்பியன் ஆன அணியில் விளையாடிய 7 வீராங்கனைகளும் இலங்கை தேசிய அணியில் பங்குபற்றினர்.

போட்டி கட்டமைப்பும் அனுசரனையாளர்களும் பின்வருமாறு:

* சூப்பர் பெஷன்ஸ் பனாந்துர இராணுவத்தின் தேசிய வீரர் செக்குக்கே பிரசன்ன தலைமையில் இராணுவ வடக்கு வாரியர்ஸ் அனுசரனை வழங்குகின்றது.

ஏனைய தேசிய வீரர்கள் தசுன் ஷானக அகில தனஞ்ஜய மற்றும் பாஹனுக ராஜபக்ஷ ஆவர்.

* சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் பிரிமா உற்பத்திகள் இராணுவ தேசிய வீரர் அசெலா குணரத்ன தலைமையிலான இராணுவ கிழக்கு வாரியர்ஸ்க்கு அனுசரனை வழங்குகின்றது.

ஏனைய தேசிய வீரர்கள் குசால் மெண்டிஸ், சந்துன் வீரக்கொடி மற்றும் சதுரங்க டி சில்வா.

* டிமோ பிரைவேட் லிமிடெட் இராணுவ தேசிய வீரர் தினேஷ் சந்திமால் தலைமையிலான இராணுவ தெற்கு வாரியர்ஸ்க்கு அனுசரனை வழங்குகின்றது.

ஏனைய தேசிய வீரர்கள் சுரங்க லக்மல், துஷ்மந்த சமீர மற்றும் வனிது ஹசரங்க.

* தேசிய வீரர் திசாரா பெரேரா தலைமையிலான இராணுவ வெஸ்டர்ன் வாரியர்ஸ்க்கு மெல்பன் மெட்டல் (பிரைவேட்) லிமிடெட் ஆசிய பசிபிக் டெக்னாலஜி சிஸ்டம்ஸ் (ஏபிடிஎஸ்) பிரைவேட் லிமிடெட் அனுசரனை வழங்குகின்றது.

ஏனைய தேசிய வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ, தம்மிக பிரசாத் மற்றும் நுவான் பிரதீப்.

ஐ.சி.சி விதிகளின் கீழ் T20 ஒவ்வொரு அணியும் மூன்று அணிகளுடன் இரண்டு போட்டிகளில் விளையாடும்.

அணிகள் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு (வாரியர்ஸ் அணிகள்)

ஒவ்வொரு அணியிலும் 2 தேசிய வீரர்களுக்கு குறையாது விளையாட முடியும்.

ஒவ்வொரு அணிக்கும் இராணுவத்திலிருந்து இரண்டு 23 வயதிற்கு குறைந்த வீரர்கள்

2 மகளிர் உதிரி வீராங்கனைகள் buy shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp