Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2020 22:00:54 Hours

இராணுவ தளபதி இராணுவத்தினரது தனிமைப்படுத்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (29) ஆம் திகதி இராணுவத்தில் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கும் இராணுவத்தினர் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளுடன் அவர்களது தங்குமிட வசதிகள் மற்றும் சுகாதார பரிசோதனைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இந்த கலந்துரையாடலின் போது நாம் எமது இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உருப்பினர்களை இந்த கொரோனா தடுப்பிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும். அதன் முன்னெச்சரிக்கையாக இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி அவர்கள் சுட்டிகாட்டினார்.

விடுமுறையிலிருந்து வீடுகளிலிருந்து வருகை தந்த இராணுவத்தினருக்கு தங்குமிட வசதிகள், உணவு வகைகள், சுகாதார வசதிகள் மற்றும் கண்காணிப்பு விடயங்களை சரியான முறையில் மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சரியான முறையில் வழங்க வேண்டும் என்று இராணுவ தளபதி மூத்த உயரதிகாரிகளுக்கு இந்த கலந்துரையாடலின் போது பரிந்துரைத்தார்.

இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு அவர்களது பாதுகாப்பு மற்றும் அவர்களது தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று மேலும் இராணுவ தளபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலில் இராணுவ தளபதியுடன் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே மற்றும் தொண்டர் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . short url link | Air Jordan