03rd February 2025 16:57:26 Hours
இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இன்று மதியம் (பெப்ரவரி 03) 2025 இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இத் தூதுக்குழுவுடன் தூதரகத்தின் துணைத் தலைவி திருமதி சோங்யீ யுங் அவர்களும் குழுவுடன் இணைந்தார்.
அவர்களுடன் இலங்கை மற்றும் நேபாளத்திற்கு அங்கீகாரம் பெற்ற புது தில்லியில் உள்ள கொரிய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் ஹான் ஜோங்குன் அவர்களும் வருகை தந்திருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து, குறிப்பாக இராணுவ ஒத்துழைப்புத் துறையில், இரு தரப்பினரும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
வருகை தந்த பிரமுகர்களை இராணுவத் தளபதி அன்புடன் வரவேற்றதுடன் மேலும் பல்வேறு நிலைகளில் இலங்கைக்கு கொரியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் இலங்கை இராணுவத்திற்கும் கொரிய குடியரசின் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான எதிர்கால ஈடுபாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் கூட்டாண்மையை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசுகளை பரிமாறிகொள்வதுடன் சந்திப்பு நிறைவடைந்தது.