03rd September 2020 11:03:59 Hours
கொழும்பு-சிலாப பிரசேத்திற்கான பிரிவேநாதிபதியான தலைமை சங்கநாயக்க தேரர் வெலமிடியவே குசலதம்மா நாயக தேரர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இராணுவத்தினரால் மேற்கொண்டு வரும் பேலியகொடையில் அமைந்துள்ள வித்யலங்கார பிரிவென தேரர்களுக்கான கற்கை கூட கேட்போர் கூட கட்டுமானத் திட்டத்தை மேற்பார்வையிடுவதற்காக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் (30) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது விஜயத்தை மேற்கொண்டார்.
இங்கு சென்ற இராணுவ தளபதி அவர்களை கௌரவத்திற்குரிய தேரர்கள் வரவேற்று பின்னர் இராணுவ தளபதி அவர்கள் கட்டுமான பணிகளை பார்வையிட்டு இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியினருடன் இந்த தேரர்களுக்கான கேட்போர் கூடம் அமைக்கும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். பௌத்த தேர்களுக்கு நாட்டில் மிகவும் புகழ்பெற்ற கற்றல் நிலையங்களில் ஒன்றான வித்யாலங்கார பிரிவென, கட்டிட வளாகத்தை விரிவுபடுத்தும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவ தளபதி தேரர் அவர்களுக்கும் இடையில் நல்லுறவு கலந்துரையாடலின் பின்னர் மிகவும் தேரர் குசலதம்மா நாயக்க தேரர் அவர்களால் இராணுவ தளபதிக்கு ஆசீர்வதிக்கப்பட்ட பிரித் நூல் கட்டப்பட்டு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது. பின்னர், இன்னும் சில சிரேஷ்ட பௌத்த தேரர்கள் இராணுவ தளபதியுடன் கட்டுமான செய்யப்பட்ட புதிய புதிய கட்டிடத் தளத்திற்குச் சென்று, இறுதித் பணிகளின் அவசியத்தையும் மீதமுள்ள பணிகளை முடிப்பது தொடர்பாக வலியுறுத்தினார்.
அத்துடன் வளாகத்திற்குள் திரும்பிச் செல்லும் வழியில், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் இராணுவத் தளபதியை வரவேற்றனர், பின் இராணுவ தளபதி அவர்களுடன் சில எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டார்.
வித்யலங்கார பிரிவென’ கேட்போர் கூடமானது 1875 இல் நிறுவப்பட்டது, பின்னர் இது இலங்கையின் இரண்டு முன்னணி துறவற கல்வி மையங்களில் ஒன்றாக வளர்ந்தது. ஒரு கல்வி மையமாக அதன் வளர்ச்சியின் உச்சநிலை 1959 ஆம் ஆண்டில் ஒரு முழு உறுதிமொழி பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகின்றது. Mysneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE