Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2022 19:06:21 Hours

இராணுவ தலைமையக நடமாடும் விற்பனை நிலையம் நிரந்தரமாக்கப்பட்டது

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் மானிய விலையில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு படையணியினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இராணுவத் தலைமையகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்காக விவசாய விற்பனை நிலையம் வாரத்தில் ஐந்து நாட்கள் திறந்திருக்கும் நிரந்தர வர்த்தக நிலையமாக மாற்றப்பட்டது.

இராணுவத் தலைமையக வாகனத் தரிப்பிடத்தில் நிர்மாணித்து ஆரம்பிக்கப்பட்ட புதிய நலன்புரி நிலையம் வார நாட்களில் 0200 மணி முதல் 0700 மணி வரை திறந்திருப்பதுடன் இதன் மூலம் இராணுவப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்களை மலிவு விலையில் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.

முன்னெடுக்கப்பட்ட நடமாடும் விவசாயப் பொருட்களுக்கு சந்தைக்கு கிடைத்த உயர்வான வரவேற்பு காரணமாக இராணுவ விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு இராணுவத் தளபதியவர்களால் இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதி மற்றும் விவசாயம் மற்றும் கால்நடைப் பணிப்பகத்தின் பணிப்பாளருக்கு இந்த நாடமாடும் விற்பனை நிலையத்தை நிரந்தரமாக உருவாக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விற்பனை நிலையத்திலிருந்து சில வகையான மரக்கறிகள் மற்றும் பிற பொருட்களை அடையாளப்பூர்வமாக வாங்கிக்கொண்டார்.

விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.