Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2020 18:34:00 Hours

இராணுவ தலைமையகத்தில் புதிய சுகாதார சேவை பணிப்பாளர் பதவியோற்பு

பிரிகேடியர் கிறிசாந்த பெர்னாண்டோ தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை (14) இராணுவத் தலைமையகத்தின் இராணுவ சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றார்.. இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் பணிப்பாளராக சேவையாற்றினார். இந்த நிகழ்வில் பணிபகத்தின் அதிகாரிகள் சிலர் பங்குபற்றிருந்தனர்.

பிரிகேடியர் ( வைத்தியர் ) கிறிசாந்த பெர்னாண்டோ தொடர்பாக சிறு அறிமுகம்:

பிரிகேடியர் கிறிசாந்த பெர்னாண்டோ அவர்கள் ஒரு மயக்க மருந்து நிபுணர் ஆவார். 2002 ம் கொழும்பு மருத்துவ பீடத்தின் வைத்திய பட்டம் மற்றும் பட்டபின் படிப்பைப் பெற்றவர். 2004ம் ஆண்டு உணர்விழக்கும் மருத்துவ சபையினால் மயக்க மருந்து நிபுணராக அங்கிகரிக்கப்பட்டார்.

பிரிகேடியர் கிறிஸ்டாந்தா பெர்னாண்டோ தொழில் ரீதியாக ஒரு ஆலோசகர் மயக்க மருந்து நிபுணர் ஆவார், மேலும் 2002 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை மருத்துவக் கழகத்திலிருந்து மயக்கவியல் துறையில் எம்.டி.யையும், 2004 இல் மயக்க மருந்து ஆலோசகராக வாரிய சான்றிதழையும் பெற்றார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் தனது இறுதி ஆண்டில் கற்கும் போது 1990 இல் இலங்கை இராணுவத்தில் இரண்டாம் லெப்டினட் ஆக இணைந்தார்.

ஐக்கிய இராச்சிய லண்டன் ராயல் மருத்துவமனை மற்றும் லண்டன் செயின்ட் பார்தலோமி மருத்துவமனைகளில் மயக்க மருந்து குறித்த வெளிநாட்டு பட்டபின் படிப்பு பயிற்சியைப் பின்பற்றினார். அவர் 2015 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவ மருத்துவமனையின் முதலாவது பணிப்பாளராக இருந்தார். இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவ மருத்துவராக அவரின் பணி உயர்வாக அங்கிகரிக்கப்பட்டதோடு மிகவும் பாராட்டப்பட்டது.

பிரிகேடியர் பெர்னாண்டோ உத்தம சேவா பதக்கம், கிழக்கு மனிதாபிமான செயல்பாட்டு பதக்கம், வடக்கு மனிதாபிமான செயல்பாட்டு பதக்கம், பூரண பூமி பதக்கம் மற்றும் ரிவிரெச நடவடிக்கை சேவை பதக்கம் ஆகியவற்றால் பெற்றுள்ளார்.

இவர் களுத்துறை மகா வித்யாலயாத்தின் பழைய மாணவர், மாற்று சிகிச்சை மருத்துவரான நில்மினியை மணந்தார். அலோகா, நிர்மல் மற்றும் அச்சிந்த ஆகிய பிள்ளைகள் உள்ளனர். latest Nike release | Shop: Nike