Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2021 09:00:27 Hours

இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி பயிவிளவல் அதிகாரிகளுக்கு தலைமைத்துவ வழிகாட்டல்

தியத்தலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பயிற்சி கல்லூரியின் சிறப்புப் பயிற்சியில் உள்ள மூன்று வெளிநாட்டு அதிகாரிகள் (சாம்பியா, ருவாண்டா, மாலைதீவு) உட்பட 89, 89 (B), 90, 60 ( தொ) மற்றும் லேடி இன்டேக் 17 (தொ) பயிலிளவல் அதிகாரி ஆகியோரின் பயிற்சிப் பாடத்திட்டத்தின் ஒரு பிரிவாக கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இன்று (25) காலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் மகளிர் பயிலிளவல் அதிகாரிகளின் இலங்கை இராணுவ பயிற்சி கல்லூரியின் இறுதி விளக்கக்காட்சிக்காக 'ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் தாக்கம்' என்ற கருப்பொருளில் தயாரிக்க இராணுவத் தளபதியை சந்தித்தனர்.மேலும் நாட்டில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக தளபதியின் நடைமுறை அணுகு முறைகளிலிருந்து கருத்துக்களைச் சேகரிப்பதில் அவர்கள் முக்கியப் பங்காற்றினர் மற்றும் தளபதி எவ்வாறு ஆயுதப்படைகளை அணிதிரட்டி நாடு முழுவதும் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை மேற்கொண்டனர் எனவும் அவர்களின் தொழில் வாய்ப்புகள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு பதில் தேடும் பாக்கியமும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, இராணுவத் தளபதி, தலைமைத்துவம், விஸ்வாசம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பாக கடமைகளை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பு ஆகிய முக்கிய விடயங்களை ஒரே நேரத்தில் வளர்த்துக் கொள்ளுமாறும் முழு அளவிலான அதிகாரி மற்றும் இராணுவத்தில் வரவிருக்கும் மற்றும் வளரும் அதிகாரிகளுக்கு முன்மாதிரி சீமான்களாக இருப்பதற்கு அவசியமான பண்புகளை சுட்டிக்காட்டினார்.

மேலும் சமூகத்தால் போற்றப்படும் மற்றும் பாராட்டப்படும் வாழ்க்கைக்கு ஒரு சொந்த கண்ணாடியாக ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார். மேலும் மூலோபாய சிந்தனைக்கு, முடிவெடுக்கும் மற்றும் செயல்பாட்டுத் திறன்கள், தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்கள், விசுவாசம் மற்றும் ஒருமைப்பாடு மற்றும் கொவிட்-19 பரவலுக்கு எதிரான அரசாங்கத்தின் முழுமையான ஒழிப்பு முறைகள் ஆகியவை தற்போது முழு அளவிலான கடமைகளின் ஒரு பகுதியாக மனதில் கொண்டு நாட்டின் மிகப்பெரிய மனிதவளமாக இருக்கும் இராணுவம் எவ்வாறு செயல்படுகிறது எனவும் அதன் வெவ்வேறு பிரிவுகள் மற்றும் அவர்களின் வகிபங்கு மற்றும் பணிகள் ஆகியவற்றை அவர்களுக்கு விளக்கினார்.

அந்த பயிலிளவல் அதிகாரிகள் தியத்தலாவையில் நடைபெறும் விடுகை அணிவகுப்பில் தங்கள் அதிகாரவாணை சின்னங்களை விரைவில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் இலங்கை இராணுவ பயிற்சி கல்லூரியின் தளபதி பிரிகேடியர் நலிந்த நியங்கொட, இலங்கை இராணுவ பயிற்சி கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் கேணல் ருவன் எஹெலேபொல, சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மேஜர் பிரியதர்ஷன டி சில்வா, பாடநெறி அதிகாரி மேஜர் டி. உக்வத்த, மற்றும் மகளிர் பாடநெறி அதிகாரி லெப்டினன்ட் கங்குலி தர்மசேன ஆகியோரும் இந்த பயிலிளவல் அதிகாரிகளுடன் கலந்துக்கொண்டனர்.