Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ தடகள வீரர்களுக்கு மாதுரு ஓயாவில் வெளிக்கள செயற்பாட்டு பயிற்சி செயலமர்வு

சர்வதேச மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பிரகாசித்த இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களின் மன நலம் மற்றும் நிலைப்புத் தன்மை என்பவற்றை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மதுரு ஓயா சிறப்புப் படை பயிற்சிப் கல்லூரியில் 80 இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி செயலமர்வொன்று நடத்தப்பட்டது. மார்ச் 3 - 7 வரையான தினங்களில், இராணுவ தடகளக் பேரவையின் தலைவரும், கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க வழங்கிய வழிகாட்டுதல்களுக்கமைய இந்த பயிற்சி செயலமர்வு நடத்தப்பட்டது.

சிறந்த வீரர்களுக்கான குழாம் மற்றும் தேசிய மட்டத்திலான குழாம் இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ விளையாட்டு வீரர்களின் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா வழங்கிய வழிகாட்டலுக்கமைய பயிற்சி செயலமர்வில் கவனம் நேரிய சிந்தனை, நுட்ப முகாமைத்துவம், மனநல பிரச்சினைகளை அடையாளம் காணுதல், ஊக்குவிப்புக்கள் ஊடான தன்நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ளல், பெருமை, கலாசாரம் மற்றும் திறன் மேம்பாடு தேசபக்தி உணர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டன.

இந்த செயலமர்வின் போது, சிறப்புப் படையின் நிபுணர் குழுவினால் விரிவுரைகள் நிகழ்த்தியதுடன், அதிகாரவணை அற்ற அதிகாரி 1 நதீகா லக்மலி (13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்), பதவி நிலை சார்ஜன்ட் யுகேஎன் ரத்நாயக்க, பதவி நிலை சார்ஜன்ட் ஹிமாஷா ஈஷன், லான்ஸ் கோப்ரல் சுகந்தி, கோப்ரல் லேகம்கே, பொம்படியர் அருண தர்ஷன, லான்ஸ் கோப்ரல் கார்போரல் ராஜசிங்க, பெண் சிப்பாய் இ.கே.மதுஷானி மற்றும் பெண் சிப்பாய் தில்ஷி குமாரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பயிற்சி செயலமர்வின் நிறைவில், பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் இலங்கை இராணுவ விளையாட்டுக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். Sports Shoes | adidas Campus 80s South Park Towelie - GZ9177