04th September 2023 19:38:00 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்திற்கு விஜயம் செய்து இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஆர்பிஎ பண்டார ஆர்எஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அழகு நிலையத்தை திறந்து வைத்தார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர்கள் இணைந்து, முதலில் பணிப்பகத்தில் சேவையாற்றும் அனைத்து நிலையினருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இரத்மலானையில் பணிபுரியும் பெண் சிப்பாய்களின் நலன்களையும் கேட்டறிந்தார்.
பதாதையை திறந்து வைத்த அவர், புதிய அழகு நிலையத்தை திறந்து வைத்து, பல பெண் அதிகாரிகள் மற்றும் பெண் சிப்பாய்களுடன் அந்த பெண் சிப்பாய்களின் தங்குமிட வசதிகளையும் வளாகத்தையும் பார்வையிட்டார்.
திருமதி ஜானகி லியனகே வருகை தந்ததையடுத்து நடனம் மற்றும் பாடலுக்கான பயிற்சி மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர், திருமதி ஜானகி லியனகே, பாரம்பரிய முறைப்படி வெற்றிலை வழங்கி வரவேற்கப்பட்டார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் (ஒருங்கிணைப்பு) பிரிகேடியர் என் மகாவிதான கேஎஸ்பீ உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் அன்றைய நிகழ்ச்சி நிரலுடன் இணைந்திருந்தனர்.
இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்திற்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில், இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஆர்பிஎ பண்டார ஆர்எஸ்பீ அவர்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.