05th August 2023 05:50:31 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களுடன் இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவும் இணைந்து புதிதாக வடிவமைத்த இராணுவ சேவை வனிதையர் இணையத்தளத்தை (www.army.lk/sevavanitha/) இன்று பிற்பகல் (ஆகஸ்ட் 04) இராணுவத் தலைமையகத்தில் அங்குர அர்ப்பணம் செய்யப்பட்டது.
திருமதி ஜானகி லியனகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜிஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஊடகப் பணிப்பாளர் மென்பொருள் பொறியியலாளர்கள் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர்களின் தீவிர ஆதரவுடன் இராணுவத்திற்கு எவ்வித செலவும் இன்றி புதிய இணையத்தளத்தை வடிவமைத்தனர்.
கேணல் ஊடகம் கேணல் ஏஎம்டிபி அதிகாரி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, ஊடகப் பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் எச்ஜிஜேடி பெரேரா ஆர்எஸ்பீ, இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் தகவல் தொழில்நுட்பத்தின் வல்லுநர்கள் குழுவைச் சேர்ந்த மேஜர் டபிள்யூபீஎஸ்டிபீ பட்டபெந்திகே, மேஜர் டிடீ கங்காணாம்கே ஆகியோரின் பங்களிப்பில் பட விபரணம், நலத்திட்டங்கள், சிறப்பம்சங்கள், சேவை வனிதையர் சிறப்பம்சங்கள், 'விருகேகுலு' செயல்பாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.
பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ , ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் என் மகாவிதான கேஎஸ்வி, கேணல் ஊடகம் கேணல் ஏஎம்டிபி அதிகாரி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.