14th January 2020 17:37:22 Hours
இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களது சேவைப் பாராட்டை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்ததோடு தளபதியவர்களின் அழைப்பை ஏற்று தளபதியவர்களின் காரியாலயத்திற்கு இன்று காலை(14) வருகை தந்த நிறைவேற்று பணிப்பாளர் அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் மற்றும் வாழ்த்துக்களை இராணுவத் தளபதியவர்கள் தெரிவித்தார்.
மேலும்; இராணுவத் தளபதியவர்கள் கருத்து தெரிவிக்கையில் மேஜர் ஜெனரல் வீரசிங்க அவர்கள் கிட்டத் தட்ட மூன்று தஸாப்த காலமாக இராணுவ சேவையில் அர்பணிப்புடன் சேவையாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இவ் உயர் அதிகாரியவர்கள் இராணுவத் தளபதியவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்ததோடு இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இவ் உயர் அதிகாரிக்கனா விசேட நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.
அந்த வகையில் இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்ந மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்கள் தமது இராணுவ சேவையின் போது பலவாறான பதவிநிலைகளில் கடமை புரிந்ததுடன் மேலும் இவ் அதிகாரியவர்கள் பாதுகாப்பு அமைச்சில் சேவையாற்றியதுடன் திருகோணமலையில் உள்ள 22ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியாக சேவையாற்றியதுடன் இறுதியாக நிறைவேற்ற பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார். Authentic Nike Sneakers | Entrainement Nike