28th March 2019 15:58:28 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினுள் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு இராணுவ சுகாதார சேவைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கே. பி சுமனபால அவர்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை இம் மாதம் (23) ஆம் திகதி மேற்கொண்டார்.
அச்சமயத்தில் சுகாதார சேவைப் பணிப்பாளரை வன்னி பாதுகாப்பு இராணுவ வைத்தியசாலையின் கட்டளை அதிகாரியான கெப்டன் டொக்டர் அகலங்க ரத்னசேகர அவர்கள் வரவேற்றார்.
இராணுவ சுகாதார சேவைப் பணிப்பாளர் இராணுவ வைத்தியசாலையில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். அத்தருணத்தில் வைத்தியசாலையில் சேவை புரியும் அனைவருக்கும்அவர்களது சேவையை பராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இராணுவ சுகாதார பணிப்பாளர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினுள் இராணுவ வைத்தியசாலை நவீன வசதிகளுடன் இயங்குவதற்கான ஒத்துழைப்பை வழங்கிய வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்தார். jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov