Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2025 06:01:48 Hours

இராணுவ சாரதிகளுக்கு போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பாவனை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், தூய இலங்கை திட்டத்தின் கீழ், இராணுவ சாரதிகளுக்கு போக்குவரத்து விதிமீறல்கள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு விரிவுரைகள் 2025 மார்ச் 05 ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தில் நடாத்தப்பட்டன.

இராணுவ சேவை படையணி, இராணுவ பொலிஸ் படையணி மற்றும் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பயிற்றுனர்களால் விரிவுரைகள் நடாத்தப்பட்டன. மேலும் வவுனியா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் ஆய்வாளர் திரு. எஸ்.எம்.ஆர். சுரவீர அவர்கள் போக்குவரத்து விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கான வழிகள் பற்றிய விரிவுரையை ஆற்றினார். இந்த விரிவுரை அமர்வில் மொத்தம் 58 சாரதிகள் பங்கேற்றனர்.